ராணுவத்தின் 6 நோய்த்தடுப்பு மையங்களில் தனிமை கண்காணிப்பை நிறைவு செய்த 403 பேர் அவரவரின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை, ஜெய்சல்மீர், ஜோத்பூர், ஹின்டான், மனேஸ்வர் உள்ளிட்ட இந்த முகாம்களில் மொத்தம் 1737 பேர் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
ஹின்டான் முகாமில் தொற்று உறுதியான 2 பேரும், மனேஸ்வரில் தொற்று உறுதியான ஒரு நபரும், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை தனி வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்புக்காக நாட்டில் உள்ள 51 ராணுவ மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ராணுவ மருத்துவமனைகளின் 5 ஆய்வங்கங்களில் கொரோனா பரிசோதனைக்கான வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.