சுற்றுலா விசாவில் வந்து, விதிகளுக்கு மாறாக, தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 41 நாடுகளை சேர்ந்த 960 பேரை கறுப்பு பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
சுற்றுலா விசாவில் வந்தவர்கள், மதம் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்பது விதி. இந்த விதியை மீறி, டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேசியாவை சேர்ந்த 379 பேர், வங்கதேசத்தை சேர்ந்த 110 பேர், கிர்கிஸ்தானை சேர்ந்த 77 பேர், மியான்மரை சேர்ந்த 63 பேர், தாய்லாந்தை சேர்ந்த 65 பேர் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி, கரீபியன் தீவுகளை சேர்ந்த டிரினிடாட் டொபாக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாது.