கொரோனா வைரசின் சங்கிலித் தொடர் பரவலை இந்தியா முறியடிக்கும் என முப்படை அலுவலர்களின் தலைவர் பிவின் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளேட்டுக்குத் தொலைபேசியில் பேட்டியளித்த அவர், முப்படைகளுக்குச் சொந்தமான 18 மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
முப்படை மருத்துவமனைகள், தனிமை முகாம்கள் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆயிரம் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முழு ஊரடங்கு, சமூக விலகல் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன்மூலம் கொரோனா வைரசின் சங்கிலித் தொடர் பரவலை ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா முறியடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால் தொற்றுநோயால் ஏற்படும் நீண்டகால விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.