குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்துக் கலந்துரையாடினர்.
ஏற்கெனவே மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் 14 மாநிலங்களின் ஆளுநர்கள், டெல்லி துணைநிலை ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகளுக்குச் சிச்சை அளிக்கச் செய்துள்ள ஏற்பாடுகள், மேலும் பரவாமல் தடுக்கச் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள மாநிலங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள், மத்திய மாநில அரசுகளின் முயற்சிக்குத் தனியார் மற்றும் தன்னார்வலர்களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.