ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுக்கு உள்துறைச் செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில், ஊரடங்கை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குகளை பதியுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், ஐ.பி.சி தொடர்பாக இருக்கும் அதிகாரங்களை முழு வீச்சில் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறைச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.