கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கட்டான சூழலில் மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் நம் தலைமுறையில் சந்தித்து இருக்கும் மிகப் பெரிய சவால் என்று குறிப்பிட்டுள்ள சத்குரு, ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் தான் இந்த நோய்த் தொற்று பரவுகிறது என தவறான செய்தியை பரப்பக்கூடாது என்று கூறியுள்ளார்.
உலகமே மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள போது அனைவரும் ஒன்றிணைந்து செயல்புரிய வேண்டியது அவசியம் என்றும் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும், விழிப்புணர்வோடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரசால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படாமல் சிறிய அளவிலேயே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.