கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதத்தில் இந்தியா உலக சராசரியை விடவும் மிகவும் குறைந்த இடத்தில் உள்ளது என கொரோனா தகவல் களஞ்சியமான Worldometers ன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றின் சராசரி விகிதம் உலகில் பத்து லட்சத்திற்கு 120 பேர் என்றிருக்கும் நிலையில், இந்தியாவில் 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற குறைவான நிலையே உள்ளது.
அது போன்று இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை உலக சராசரி 10 லட்சத்திற்கு 6 ஆக இருக்கும் போது இந்தியாவில் அது பூஜ்யம் புள்ளி பூஜ்யம் 4 என்ற மிகமிக குறைவான அளவில் உள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இதே கணக்கின்படி இந்தியா இன்னும் பாதுகாப்பாக 178 ஆவது இடத்தில் இருக்கிறது.
கொரோனா மிகவும் குறைவான பாதிப்பை ஏற்படுத்திய 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது என்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.