மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் குறைந்த செலவில் வெப்பமானியைத் தயாரித்துள்ளதுடன், உடல் முழுவதையும் பாதுகாக்கும் கவசங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கடற்படைத் தளத்துக்கு வரும் பணியாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
இதற்காகக் கடற்படைத் துறைமுகத்தில் உள்ள மின்னணு உதிரிப் பாகங்களைக் கொண்டே அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் காய்ச்சலைக் கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
ஆயிரம் ரூபாய் செலவில் இந்தக் கருவியை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளனர். சந்தையில் இதன் விலை இரண்டாயிரம் ரூபாயில் இருந்து ஏழாயிரம் ரூபாய் வரை உள்ளது.
அதேபோல் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மருத்துவப் பணியாளர்கள் உடல் முழுவதும் அணியும் பாதுகாப்புக் கவசங்களையும் கடற்படை ஊழியர்கள் தயாரித்து வருகின்றனர்.