கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்ய விப்ரோ நிறுவனமும், அசீம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து ஆயிரத்து 125 கோடி ரூபாய் பங்களிப்பை நல்குவதாக அறிவித்துள்ளன.
விப்ரோ நிறுவனம் 100 கோடி ரூபாய், விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய், அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் ஆயிரத்து 125 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கும், சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பவர்களின் துயர் தணிப்பதற்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என விப்ரோ அறிவித்துள்ளது.