மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, டெல்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையம் உடனடியாக மூடப்பட்டது.
டெல்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையத்தில் (the Delhi State Cancer Institute) பணியாற்றிய மருத்துவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து திரும்பிய சகோதரர், சகோதரரின் மனைவியிடம் இருந்து மருத்துவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மருத்துவருக்கு கொரோனா உறுதியானதால், அவர் பணியாற்றிய டெல்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையமும், அங்குள்ள அலுவலகங்கள், பரிசோதனை நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைபடுத்தும் பணி நடைபெறுகிறது.