ஈஷா மையத்தில் தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ள அம்மையம், வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே ஈஷா மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும், பாதிப்புக்குள்ளான நாடுகளை சேர்ந்தவர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா மையத்துக்கு வந்த மற்ற வெளிநாட்டினர் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதோடு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆங்காங்கே சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும், பிப்ரவரி மாதம் முதலே மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஷா மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.