பஞ்சாபின் நாபா நகரில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவுத் தொழிலாளர் மீது பூமாரி பொழிந்து பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியே சென்றால் கொரோனா தொற்றிவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருத்தெருவாகச் சென்று சாலைகளைப் பெருக்கித் தூய்மை செய்வதுடன் கழிவுகளைச் சேகரித்து அகற்றி வருகின்றனர்.
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் நாபா என்னும் நகரில் இவ்வாறு தூய்மைப்பணி மேற்கொண்ட துப்புரவுத் தொழிலாளர் மக்கள் பூமாரி பொழிந்து பாராட்டினர்.