கொரோனா வைரசுக்கு அதிகாரப்பூர்வமான மருந்து எதுவும் அறிவிக்கப்படாத போதும் பல்வேறு மருத்துவ நிபுணர்களும் ஆய்வாளர்களும் பரிசோதனையின் அடிப்படையில் பல்வேறு மருந்துகளின் பெயர்களைப் பரிந்துரை செய்து வருகின்றனர்.
இதில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் குழந்தைகளின் காச நோய்க்கும் வழங்கப்படும் BCG எனப்படும் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் சாண்டியாகோவில் நடைபெற்ற மருத்துவ ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.பிசிஜி கொரோனாவால் ஏற்படும் மரணத்தைத் தடுக்கக்கூடிய தன்மையை பெற்றிருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் இரண்டரை கோடி குழந்தைகளுக்கு இலவசமாக பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது.