கொரோனா வைரஸ் பாதிப்பால் மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 60 விழுக்காடு தாமதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அஜித் பவார், ஏ மற்றும் பி கிரேடு ஊழியர்களின் சம்பளத்தில் 50 விழுக்காடும், சி கிரேடு ஊழியர்களின் ஊதியம் 25 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிடிக்கப்படும் சம்பளம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.