நித்திரை யோகா குறித்து வீடியோ பதிவிட்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேரம் கிடைக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறையாவது தான் நித்திரை யோகா செய்வதாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, அதனால் விளையும் பயன்கள் குறித்தும் அந்த பதிவில் விளக்கியிருந்தார்.
மேலும் எவ்வாறு நித்திரை யோகா செய்வது என்பது குறித்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளக்கும் வீடியோவின் இணைப்பையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள இவாங்கா ட்ரம்ப், அதனை பகிர்ந்தமைக்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.