டெல்லி அருகே நொய்டாவில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய 16 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளது.
அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் வேறு சிலரும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய பின் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.
வெளிநாடு சென்றுவந்ததை உள்ளூர் நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இல்லை. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.
பணியாளர்களைப் பரிசோதித்ததில் 16 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் வெளிநாட்டுப் பயண விவரங்களை மறைத்ததாக அந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் கவுதம் புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் அந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்தது.