முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்களுக்கு 75 சதவீதமும், அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் வரையும் சம்பள குறைப்பை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
நிதி நிலை குறித்து ஆராய கூட்டப்பட்ட உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் சம்பளத்தில் 75 சதவீதம் வெட்டப்பட்டு, 25 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயரதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளமும், பிற அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமும் சம்பளம் குறைக்கப்படும்.
நான்காம் வகுப்பு ஊழியர்கள், அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 சதவீத சம்பளம் குறைக்கப்படும். அரசுத் துறை நிறுவனங்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த சம்பளக்குறைப்பு அறிவிப்பு பொருந்தும்.