கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு காலாவதியான வாகன மற்றும் ஓட்டுநர் ஆவணங்கள் ஜூன் 30 வரை ஏற்புக்குரியதாகவே கருதப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி வாகன தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை பிப்ரவரி 1க்குப் பிறகு காலாவதியாகியிருந்தால் அது தொடர்பாக போலீசாரும் போக்குவரத்துத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அந்த ஆவணங்களை ஜூன் 30 வரை ஏற்புக்குரியதாகவே கருத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிக வாகனங்களான டாக்சிகள் பேருந்துகள் உள்ளிட்டவை ஊரடங்கால் தற்போது இயங்காத நிலையில் அவற்றுக்கு மாநில அரசுகள் வரித் தள்ளுபடி அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது நபர் காப்பீட்டு பிரீமியம் வசூலிப்பதை ஐ.ஆர்.டி.ஏ. ஒத்திவைத்திருப்பதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை பழைய பிரிமீயத் தொகையே செலுத்தலாம்.