கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் நட்சத்திர விடுதிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
1897-ஆம் ஆண்டு தொற்றுநோய்கள் சட்டப் பிரிவின் படி ஹோட்டல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் உஜ்ஜயினியில் 28 நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் திருமணக் கூடங்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பில்வாரா நகரங்களில் நட்சத்திர ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள், மாணவர் விடுதிகள், சமூகக் கூடங்கள், சத்திரங்கள், கிளப்புகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் எர்ணகுளம், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட இடஙளில் பல ஹோட்டல்கள் தனியார் கட்டிடங்கள் உள்ளிட்டவை தனிமை வார்டுகளாக்கப்பட்டுள்ளன. லக்னோ, ஆக்ரா, பெங்களூரு, பனாஜி உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன