பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட்சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20-வரை துண்டிக்கப்படாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிகள் மற்றும் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆகியோருடன் காணொலி காட்சி முறையில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிஎஸ்என்எல் மற்றும் தபால்துறை என இரண்டு துறைகளுமே இந்த சிக்கலான காலகட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் கட்டணம் ஏதும் கட்டா விட்டாலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20ம் தேதி வரை துண்டிக்கப்படாது என்றும், அத்துடன் ஏழை மக்கள் மற்றும் தேவையான சூழலில் இருப்பவர்களுக்கு கால்கள் செய்வதற்கு ஏதுவாக அவர்கள் கணக்கில் 10 ரூபாய் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.