டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்துவதற்காக, 5 நட்சத்திர ஹோட்டல்கள் அரசு செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மற்றும் ஜிபி பந்த் மருத்துவமனை மருத்துவர்கள், அங்குள்ள லலித் சொகுசு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
அரசு சார்பில் இதற்காக 100 அறைகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை பொருத்தவரை, லக்னோவில் உள்ள ஹையாத் ரீஜென்சி, ஃபேர் ஃபீல்டு மற்றும் லெமன் ட்ரீ உள்ளிட்ட ஹோட்டல்கள் அரசு சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதற்கான செலவை அம்மாநில அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.