அடுத்த மாத மத்தியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் என சமூகவலைதளங்கள் வழியாகப் பரவும் செய்தி பொய்யானது என ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டமாக மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் அவசர நிலையை பிறப்பிக்கும் என்றும், அதைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாக ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் களமிறக்கப்படுவார்கள் எனவும் பல சமூக ஊடகங்களில் வதந்தி பரவியுள்ளது.
இதற்கு இந்திய ராணுவம் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இது பொய்யான செய்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.