கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள காய்கறிச் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. மேலும் பரவாமல் தடுக்க ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பராமரிக்க வேண்டும் என அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.
இதைச் சற்றும் பொருட்படுத்தாமல் லூதியானா மொத்தவிலைக் காய்கறி அங்காடியில் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூட்டமாகக் கூடி நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.