கொரோனா பாதிப்படைந்த ஒருவருக்கு சிகிச்சையளித்த 6 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் அந்நோய்த் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சத்தால் 14 பேர் டெல்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியின் ஆர்.எம்.எல். மருத்துவமனையில் செவிலியர் ஒருவருக்கு காய்ச்சல் உருவானது. இதையடுத்து அந்த மருத்துவக் குழுவினர் முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டை விட்டு 14 நாட்கள் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.