நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் டெல்லி உட்பட பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.
மக்கள் வீட்டில் முடங்கியுள்ளதால் போக்குவரத்து வெகுவாக குறைந்ததோடு, அதிக அளவிலான நச்சுப்புகையை வெளியேற்றி வந்த தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
இதனால் காற்றின் தரத்தை குறைக்க கூடிய நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு, கந்தக டைஆக்சைடு ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்து காற்றின் தரம் உயர்ந்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டின் 39 நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும், 51 நகரங்களில் திருப்தி அளிக்கும் நிலையிலும் உள்ளது.