கொரோனா தடுப்பு நடவடிக்கையாக,விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கான சுவாச பரிசோதனை நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் மது அருந்தி உள்ளனரா என்பதை கண்டுபிடிக்க இந்த சுவாச சோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை அன்று ஸ்பைஸ்ஜெட் விமானி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து சுவாச பரிசோதனை கருவியை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என ஏர் இந்தியா விமானிகள் கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை இதர விமான நிறுவன பணியாளர்களும் விடுத்த தை அடுத்து சுவாச பரிசோதனை முறை கைவிடப்பட்டுள்ளது.