கொரோனாவைத் தடுக்கும் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தாமும்,காங்கிரஸ் தொண்டர்களும் ஆதரவு அளிப்பதாக ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் கொரோனா தொற்று நிலைமை இதர பெரிய நாடுகளில் இருந்து வித்தியாசமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாம் அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பலவேறு சிக்கலான சமூக அமைப்புகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்ற நுணுக்கமான தடுப்புமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் ராகுல் காந்தி தமது கடிதத்தில் கூறி இருக்கிறார். வேலையிழந்து கிராமங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான இளைஞர்களால், பெரிய அளவில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், இதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.