புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடவுள்ளதாகவும் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மார்ச் 31க்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு மத்திய அரசின் நிதியை பெற்ற பின்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாக உள்ளது.
திங்கட்கிழமை கூடவுள்ள பேரவை கூட்டத்தில் அரசின் அடுத்த நான்கு மாத செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்வார் என சட்டப்பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்சனையால் மிகக்குறைந்த நேரம் மட்டுமே நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தில் அவைக்கு உள்ளேயும், வெளியேயும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.