சில மாநிலங்களில் ஊரடங்கையும் மீறி கூட்டங்கூட்டமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய லட்சக்கணக்கான தொழிலாளர்களை அரசு நோய்த் தடுப்பு மையங்களில் 14 நாட்கள் தனிமையில் வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் வாயிலாக கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவக் கூடும் என்ற அச்சத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தெரிவித்தார். இடம் பெயரும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களை கண்காணிப்பில் வைக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.