மார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரையுள்ள நாட்களில் ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில்வே முன்பதிவு மையத்தில் எடுத்த பயணச்சீட்டுகளை மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால், டிக்கட் டெபாசிட் ரசீது படிவத்தை நிரப்பிக் கோட்டத் தலைமை வணிக மேலாளர், மண்டலத் தலைமைக் கோருருமை அதிகாரிக்கு ஜூன் 21ஆம் தேதி வரை கொடுத்து மீதித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்படும் அனைத்துப் பயணச்சீட்டுகளுக்கும் முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும். ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால் மீதித் தொகை, அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மார்ச் 27ஆம் தேதிக்குப் பின் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு முழுத் தொகையும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1608804