மருந்துகள், முகமூடிகள், கையுறைகள், கிருமிநாசினிகள் தேவையான அளவு கிடைப்பதை உறுதி செய்யுமாறுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஆணையத்தின் தலைவர் சுப்ரா சிங், அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும், நலவாழ்வுத்துறைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மருந்துகள், மருத்துவக் கருவிகள் தயாரிப்பு, வழங்கல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மருந்துகள், முகமூடிகள், கையுறைகள், கிருமிநாசினிகள் தடையின்றிக் கிடைப்பதை அவற்றின் தயாரிப்பாளர்கள், முகவர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து உறுதி செய்துகொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும் கூறியுள்ளது.
மேலும் தகவல்களுக்கு : https://www.mohfw.gov.in/pdf/NPPADOLETTER28032020.pdf