நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.
அதே சமயம் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வாழ்வா சாவா என்ற பிரச்சனையாக மாறி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, ஊரடங்கால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மக்கள் தம்மை மன்னிப்பார்கள் என தமது மனசாட்சி கூறுவதாக நெகிழ்ந்துள்ளார்.
அதே சமயம் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு, தம்மை பிரதமர் இந்த நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டாரே என்ற எண்ணம் தோன்றலாம் என கருதுவதாவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊரடங்கு உங்களையும்,உங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றும் முயற்சி என்று விளக்கம் அளித்துள்ள அவர், மேலும் பல நாட்களுக்கு இது போன்ற பொறுமையை காக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.