உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறைகளில் இருந்து 11 ஆயிரம் கைதிகளை விடுவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள், ஏழாண்டுக்கும் குறைவாகச் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் ஆகியோரைப் பரோலில் விடுவிப்பது பற்றி முடிவெடுக்குமாறு மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் எட்டாயிரத்து ஐந்நூறு பேர், ஏழாண்டுக்குக் குறைவாகச் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் என மொத்தம் பதினோராயிரம் பேரை விடுவிக்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்த உத்தரவு அந்தந்தச் சிறை நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டவுடன் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.