கொரோனா சிகிச்சை சேவையில் ஈடுபட்டுள்ள மூத்த செவிலியர் ஒருவரை, சர்ப்ரைசாக தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
ஹலோ இது சகோதரி சாயாவா...நான் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறேன்...இப்படி ஒரு செல்போன் அழைப்பு வந்ததும் சாயா என்ற மூத்த செவிலியரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
தினமும் இப்படி 150 முதல் 200 பேர் வரை தொலைபேசியில் அழைத்து மோடி பேசி வருகிறார்.
21 நாள் ஊரடங்கை பிரதமர் இப்படி வீட்டில் இருந்தபடியே பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
புனேயில் உள்ள மருத்துவமனையில் தன்னலமற்ற சேவை செய்யும் செவிலியர் சாயாவும் பிரதமர் தொடர்புகொண்ட மக்களில் ஒருவர். உங்கள் குடும்பத்தின் கவலைகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்ட மோடி பயப்பட வேண்டாம் என்று அவர்களை கேட்டுக் கொண்டார்.