வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பரிவர்த்தனைகளை நடத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், இந்த நெருக்கடியான நேரத்திலும் வங்கிகள் மக்களுக்கு நல்ல சேவையை அளித்து வருவதாக பாராட்டி உள்ளார்.
வங்கி தொடர்பான நடவடிக்கைகள், அதன் பணியாளர்களின் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு எந்த இடையூறும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளையும் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வங்கிகளுக்கு வரும் வங்கிகளுக்குமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், ஜலதோஷம், காய்ச்சல் உள்ளவர்கள் வங்கிகளுக்கு வருவதை தவிர்க்குமாறும் இந்திய வங்கிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.