பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒரே நபர் மூலம் 23 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 18ம் தேதி கொரோனா பாதிப்புக்கு முதல் பலியாக, 70 வயது நபர் உயிரிழந்தார்.
குருத்வாரா மதகுருவான அவர் ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு மார்ச் 7ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளாமல், மக்களை சந்தித்ததோடு ஹோலா மோகல்லா பண்டிகையிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்துவிட, அவரது இரு மகள்கள், 3 மகன்கள், 2 மருமகள்கள் மற்றும் 7 பேரக்குழந்தைகளுக்கும் தொற்று பரவியுள்ளது.
மேலும் 100 பேருக்காவது அவரிடமிருந்து தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அம்மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 33 பேரில், 23 பேருக்கு இந்த ஒரே நபரால் தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது.