கொரோனா தடுப்பு போருக்கு தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகள் உருவாக்கி உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேவைப்படும்போது தங்களை மாநில அரசுகள் அழைக்கும்பட்சத்தில், போருக்கு செல்வதுபோல் தயாராவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தமிழகம் மற்றும் பீகாரில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறினார்.