நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் செல்போன் உற்பத்தித் துறையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தொழில்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள உற்பத்தியாளர்கள், கொரோனா வைரசால் சீனாவில் இருந்து வரும் உதிரி பாகங்களின் வரத்து குறைந்து செல்போன் உற்பத்தி குறைந்த நிலையில், தற்போது அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் துறையில் உள்ள சிறிய நிறுவனங்கள் நாளொன்றிற்கு 5 முதல் 6 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாகவும், பெரு நிறுவனங்கள் அதை காட்டிலும் கூடுதல் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.