ஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பி.யை பணிஇடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று ஏலூரில் அனுமன் சந்திப்பு என்ற இடத்தில் உள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், ஊரடங்கை மீறி மக்கள் செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.
இதுபற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை போலீசார் தடுத்ததுடன், அடையாள அட்டைகளை காண்பித்த போதும் அதைபொருட்படுத்தாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது காரில் இருந்த டி.எஸ்.பி. திலிப் கிரண் என்பவர் செய்தியாளர்களை நோக்கி வேகமாக வந்து லத்தியால் சரமாரியாக தாக்கினார்.
இதில் 7 செய்தியாளர்கள் காயம் அடைந்ததைத்தொடர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி திலிப் கிரணை பணிஇடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.