ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தவை மீறுவோரின் கைகள் மற்றும் நெற்றியில் போலீசார் அடையாள முத்திரைகளை குத்தினர்.
கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு நாடு தழுவிய ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், அலட்சியமாக சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு தவளை தாவல், தோப்புக்கரணம் போடுவது உள்ளிட்ட நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஜம்முவின் ரன்பீர் சிங் புரா, பிஷ்னா உள்ளிட்ட நகர்களில் அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சென்றவர்களை எச்சரிக்கும்வகையில் அவர்களது கை மற்றும் நெற்றியில் கொரோனா ஊரடங்கை மீறியவர் என்று அழியாத மை கொண்டு முத்திரை வைத்தனர்.
குறைந்தது 2 வாரத்துக்கு அழியாத இந்த முத்திரையால் வெட்கப்பட்டு வெளியே வரமாட்டார்கள் என நம்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.