பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் தேவதத் ராம் என்பவர் காயம் அடைந்த தனது மனைவியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
வாகனங்கள் இல்லாத ஊரடங்கு, கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தமது மனைவிக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சையளிக்க அவர் சைக்கிளில் உட்கார வைத்து சென்றார்.
வாடைக் கார் அமர்த்த தமக்கு பண வசதி இல்லை என்று கூறிய அவர், ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல 2 ஆயிரம் ரூபாய் கேட்பதாக தெரிவித்தார். இதனால் தாமே மனைவியை அழைத்துச் செல்ல சைக்கிளை எடுத்து வந்து விட்டார்.