கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர்களை தயாரித்து அளிக்க முடியுமா என மாருதி சுசுகி (maruti suzuki) நிறுவனத்தை மத்திய அரசு அணுகியுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் வென்டிலேட்டர்கள் அரசுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியை அணுகி, வென்டிலேட்டர்களை தயாரித்து தர முடியுமா என மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா, வாகன தயாரிப்பும் வென்டிலேட்டர் தயாரிப்பும் வேறு வேறானவை என்றும், ஓரிரு தினங்களில் அது சாத்தியமா என்பதை முடிவு செய்து அரசுக்கு தெரியபடுத்துவோம் என்றும் கூறினார்.