கொரோனா அச்சம் காரணமாக மும்பையில், நாளிதழ்கள் அச்சிடும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டு, ஏப்ரல் 1 ம் தேதிக்கு பிறகே இனி பத்திரிகைகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில், மஹாராஷ்டிரா தொழில் துறை அமைச்சர் Subhash Desai தலைமையில் நடைபெற்ற ஆலோ சனை கூட்டத்தில் நாளிதழ் வெளியீட் டாளர்கள், பத்திரிகை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய சூழலில், நாளிதழ்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஏப்ரல் 1 ம் தேதிக்கு பின், நிலைமை சீரடைந்ததும் மீண்டும் நாளிதழ்களை அச்சிட்டு, விநியோகிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், மஹாராஷ்டிரா மாநிலம், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது நினைவுகூறத்தக்கது.