புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறியதாக 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அங்கு தடை உத்தரவு அமலில் உள்ளது.
வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், உத்தரவை மதிக்காமல், கடைகளை திறந்து வைத்த மற்றும் அநாவசியமாக சுற்றித்திரிந்த 42 பேர் மீது அங்குள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.