நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளின் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்யும்படி மாநில அரசுகள் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தலை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.