செய்திதாள்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு குறைவான சாத்தியமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்திதாள்களை பல்வேறு நபர்களும் தொடுவதால் அதன்மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பல்வேறு சூழ்நிலைகள், தட்ப வெப்ப நிலைகளில் எடுத்து வரப்படும் பொருள்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய மருத்துவ சங்க (indian medical association) முன்னாள் தலைவரான கே.கே. அகர்வால், செய்திதாள்களும், மற்ற பொருள்கள் போன்றதுதான் என்றும், ஆதலால் செய்திதாள்களை வாசிக்கும் முன்பும், வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என தெரிவித்துள்ளா