கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச ஆடைகளை போதிய அளவில் தயாரித்து தருமாறு அது தொடர்பான நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் ஏற்றுமதியை தொடர இயலாது பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தெரிவித்து விட்டன.
இதை அடுத்து உலக சுகாதார நிறுவன அளவுகோல் மற்றும் ISO தரத்துடன் கூடிய பாதுகாப்பு கவச ஆடைகளை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 நிறுவனங்கள் அதற்காக முன்வந்துள்ளதுடன்அதற்கான மாதிரிகள் பெறப்பட்டு, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.