சிறைக் கைதிகளைப் பரோலில் விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கக் குழுக்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான எண்ணிக்கையிலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, குற்ற வழக்குகளில் 7 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்கள், அல்லது 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 6 வாரக்காலம் பரோல் வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யாரையெல்லாம் பரோலில் விடுவிப்பது என்பது குறித்து உயர்நிலைக் குழு அமைத்து மாநிலச் சட்டப்பணிகள் ஆணையத்துடன் கலந்தாய்வு செய்து முடிவெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.