வான்வெளியில் பறந்துகொண்டே எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களைக் குத்தகைக்கு வாங்குவது பற்றி இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.
பாதுகாப்புத் தளவாடக் கொள்முதலுக்கான புதிய வரைவுத் திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில் முப்படைகளுக்குத் தேவையான மிக அதிக விலைமதிப்புள்ள தளவாடங்களைக் குத்தகைக்குப் பெறுவதன் மூலம் ஆயுதத் தளவாடக் கொள்முதலுக்கான செலவைக் குறைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வான்வெளியில் பறந்துகொண்டே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட ரஷ்யாவின் இல்லியுசின் வகை டேங்கர் விமானங்கள் 6 மட்டுமே இந்திய விமானப்படையில் உள்ளன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் புதிய டேங்கர் விமானங்களை வாங்கப் பலமுறை முயன்றும், விலை அதிகம் என்பதால் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் டேங்கர் விமானங்களைக் குத்தகைக்குப் பெற இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.