சர்வதேச விமானங்களை இயக்கிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்ய வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக் குழு விமானிகள் தலைவர் ஆர். எஸ். சந்து விடுத்துள்ள அறிக்கையில், கொரோனாவின் நெருக்கடியால் சர்வதேச விமானங்களின் உட்பகுதியை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். விமானத்தை இயக்கியவர்கள் 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுய சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.